உலக முடிவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: 2 பேர் காயம்

-பதுளை நிருபர்-

மடூல்சீமை எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் சானுவ பகுதியில் மது அருந்தி விட்டு பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்து 2 போர் பலத்த காயங்களுக்குள்ளன நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பசறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் தனது 25ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக குறித்த பகுதியில் தனது நணபர்கள் ஐவர் சகிதம் மது அருந்தி கொண்டிருந்த வேளை 25 வயது பிறந்த நாளை கொண்டாடும் நபர் கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற மற்றைய நபரும் விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

 

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் வைத்திய அதிகாரி பாலித ராஜபகஷவிடம் வினவிய போது நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பதுளை பொது வைத்தியசாலைக்கு பலத்த காயமடைந்த நிலையில் இருவரை கொண்டு வந்ததாகவும் அதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையிலேயே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றையவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.