உலக மது ஒழிப்பு தினம்
மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அதனால் ஏற்படும் நோய்களால் அகால மரணம் அடைகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியம் நடத்திய ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் ரூ. 237 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று உலக மது ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதுமாக இன்று மது ஒழிப்பு தினத்தின் கொண்டாட்டங்கள் அமைகின்றன.
மது அருந்துபவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பெரும் உடல்நலப் பாதிப்புகளை இது ஏற்படுத்துகின்றது.
மதுபானப் பயன்பாடு சமூகத்தின் நலனையும் பாதிக்கிறது.
உலகம் முழுவதும் மதுபானம் அருந்துவதால் வருடத்திற்கு பல மில்லியன் மக்கள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல நாடுகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்.
மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடாத்தப்படும்.
“மது ஒழிப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதரின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும்.”
