உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபவணி

-மன்னார் நிருபர்

உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று செவ்வாய்க்கிழமை முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விழிப்புணர்வு நடைபவணி இடம் பெற்றது.

முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நடை பவனியில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், சிலாவத்துறை வைத்தியசாலை வைத்தியர் உட்பட்ட ஊழியர்கள், பிரதேச சபை, பிரதேச செயலக ஊழியர்கள், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், சிலாவத்துறை மதரஸா மாணவர்கள், பிராந்திய தொற்றா நோய் வைத்திய அதிகாரிகள் மற்றும் முசலி வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.