
உலக நீர் தினத்தினை முன்னிட்டு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மரநடுகை
-கிண்ணியா நிருபர்-
சர்வதேச நீர் தினமான மார்ச் 22 இனை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கந்தளாய் காரியாலயம் ஏற்பாடு செய்த மரநடுகை மற்றும் புதிய பிரதான குழாய் நீர் பொறுத்தும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரநடுகையை ஆரம்பித்து வைத்ததுடன் பேரமடுவ பகுதியில் பிரதான நீர் குழாயும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் பாடசாலை மாணவிகள் கலந்து கொண்டு மரநடுகையில் ஈடுபட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி மற்றும் நீர் வழங்கல் சபையின் பிரதி பொது முகாமையாளர், திருகோணமலை பிராந்திய முகாமையாளர்,சமூகவியலாளர் ,பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


