
உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில் ஒரே மொழியை பேசும் மக்கள் உள்ளன. அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழிதான். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது. உலக தாய்மொழி தினம் (International Mother Language Day) ஆண்டுதோறும் பெப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் பன்மொழிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தாய்மொழி தினத்திற்கான யோசனை வங்காளதேசத்தில் உருவானதுஇ பெப்ரவரி 21- 1952 அன்று வங்காள மொழியை அங்கீகரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு, தாய்மொழிகள் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் களஞ்சியமாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
யுனெஸ்கோ பன்மொழிக் கல்வியை ஆதரிக்கிறது. ஒரு நாட்டின் தாய்மொழியை கற்பது மூலம் அறிவாற்றல், கல்வி, செயல்திறன் ஆகியவை மேம்படுகிறது. தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் சிறப்பான வாசிப்பு புரிதல் மற்றும் சமூக திறன் கொண்டதாக வளர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் கற்றல் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, பள்ளிக் கல்வியின் ஆரம்ப வகுப்புகளில் இருந்தே தாய்மொழி கல்வியை அமுல்படுத்துமாறு அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.
இந்தியா மொழியில் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உலகளவில் விளங்குகிறது. இந்தியாவில் 1600 மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு மேல் உள்ள நிலையில்இ இந்திய அரசிலமைப்பு சட்டம் 22 மொழிகளுக்கு 8-வது அட்டவணையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த பன்முகத்தன்மை இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும், சவால்களும் நிறைந்துள்ளது. கடந்த 1971 மக்கள்தொகை கணக்கடுப்பிற்கு பிறகு, 10 ஆயிரத்திற்கு குறைவான மக்கள் பேசும் மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் எதிரொலியாக கடந்த 50 வருடங்களில் 220க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளன.
மத்திய அரசு மொழிக் கலாச்சாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக 8வது அட்டவணையில் 14 முதல் 22 மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மிரி, தோக்ரிஇ, உருது, ஹிந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
11 செம்மொழிகளை அங்கீகரித்த ஒரே நாடு இந்தியாவாகும். இதன்மூலம் பல மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்பு நிறுவனங்கள் மொழிகளை மேம்படுத்த நிறுவப்பட்டுள்ளன.
உலக தாய்மொழி தினம்
சர்வதேச தாய்மொழி தினம் 1999 நவம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மொழி இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் தொடங்கப்பட்டது.
உலக தாய்மொழி தின வரலாறு
1952 இல் இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக சர்ச்சையால் உயிர்நீத்தவர்களுக்கு இத்தினத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.
நினைவுச்சின்னம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆஷ்ஃபீல்ட் பூங்காவில் சர்வதேச தாய்மொழி தின நினைவுச்சின்னம் ஒன்று, அன்று உயிரிழந்த நான்கு இளம் மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படும்போது, மக்கள் அவ்விடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். மொழி பன்முகத்தன்மையின் சீரழிந்த நிலைக்கு எதிரான போராட்டத்தில் இளம் உயிர்கள் செய்த தியாகத்தை நினைவூட்டுவதாகும்.
எங்கு பொதுவிடுமுறை
சர்வதேச தாய்மொழி தினத்தில் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் மொழி பெருமைகளை கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்நாள் பங்களாதேஷில் ஒரு பொது விடுமுறை தினமாகும்.
சர்வதேச தாய்மொழி தினத்தின் தொனிப்பொருள்
சமூகங்களின் ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தொனிப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2022 சர்வதேச தாய்மொழி தினத்தின் கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்பதாகும். ஐ.நா. தனது அறிக்கையில், இந்த ஆண்டின் கருப்பொருள் பன்மொழிக் கல்வியை முன்னேற்றுவதற்கும், அனைவருக்கும் தரமான கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தின் சாத்தியமான பங்கை உயர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இறுதிகுறிப்பு
உலகில் பேசப்படும் 6000 மொழிகளில் குறைந்தபட்சம் 43 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன. மேலும் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அது வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாள் கடைபிடிக்கிறது.