உலக தடகள செம்பியன்ஷிப்புக்கு நேரடியாகத் தகுதி பெற்ற ருமேஷ்!
இந்தியாவில் இடம்பெற்று வரும் தடகளப் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க இலங்கை சாதனையை புதுப்பித்துள்ளார்.
அவர் இதன்போது 86.50 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு செப்டெம்பரில் ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப்பிற்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார் .