
உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போது கொரோனா மற்றும் டெங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்கள் விரைவில் கொரோனா தொற்றை விட இருபது மடங்கு கொடிய ‘X’ என்ற நோயை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் எச்சரித்துள்ளது.
இதுவரை பார்வைக்கு பரவாத ‘X’ என்ற நோய்க்கிருமி மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘X’ நோய் ஏற்கனவே விலங்குகளிடையே பரவி, எந்த நேரத்திலும் மனிதர்களுக்கு பரவி, உலகளாவிய தொற்றுநோயாக பரவும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
