
தினசரி சிறுநீரக நோயினால் நோயாளிகள் உயிரிழப்பு
இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதே ஆண்டில் 1,626 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
2023 – 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆக காணப்பட்டது.
சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை 300 ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வடமத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
“விழிப்புடன் இருங்கள், ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள், சிறுநீரகங்களைக் காப்பாற்றுங்கள்”இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.