உலக சாதனை படைத்த 7 வயது சிறுமி

இந்தியாவில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் ஸ்கேட்டிங் சென்டர் சார்பில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 7 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

 

புளியங்குடி பள்ளியில் பயிலும் மாணவி ஜெ. முவித்ரா(வயது – 7) என்ற மாணவியே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த சிறுமி 30 கிலோமீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து யுனிக்கோ உலக சாதனை படைத்துள்ளார்.