உலக சாதனை படைத்தது பீகார் அணி – 14 வயது வைபவ் மற்றும் சகிபுல் கனி அதிரடி!

விஜய் ஹசாரே கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று  புதன்கிழமை நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், பீகார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

2022 இல் தமிழ்நாடு அணி (506/2) படைத்திருந்த சாதனையை முறியடித்து, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்ற அணியாக பீகார் முதலிடம் பிடித்தது.

அத்துடன் வெறும் 32 பந்துகளில் சதம் விளாசி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சரித்திரத்தை சகிபுல் கனி படைத்தார்.

இவர் 128 ஓட்டங்களைக் குவித்தார்.

மேலும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 190 ஓட்டங்களை (15 சிக்ஸர்கள்) விளாசினார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் மற்றும் அதிவேக 150 ஓட்டங்களை எடுத்த வீரர் ஆகிய உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தினார்.