உலக சந்தையில் புதிய உச்சத்தை அடைந்துள்ள தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 5,107 டொலர்களாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியைக் காட்டிலும் இன்று 44 டொலர்கள் அதிகரித்துள்ளது. இது 0.95 சதவீத உயர்வாகும்.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் 2 டொலர்களால் அதிகரித்து, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.