உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு

தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85.14 டொலராக பதிவான பிரென்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை நேற்று கிட்டத்தட்ட 92 டொலரை எட்டியது.

செப்டம்பர் கடைசி வாரத்தில் ஒருமுறை 82 டொலராக சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் இறுதி வாரத்தில் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய்யின் விலை 78 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 டொலர்களாக உயர்ந்துள்ளது.