உலக சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தாக்கங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
