உலக காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கும், சுவர் ஓவியமும்

-சம்மாந்துறை நிருபர்-

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலைய கூட்ட மண்டபத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் வெளிச்சுவரில் காசநோய் விழிப்புணர்வு ஓவியம் வரைவதற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் வெளிச் சுவரில் கையெழுத்து இடும் பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி.சுகனன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வாஜித், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.