உலகில் மோசமான செயல்திறன் கொண்ட நாணயம்

ப்ளூம்பெர்க் சஞ்சிகையின் சமீபத்திய நாணய செயல்திறன் தரவரிசையின்படி, கானா நாட்டின் கானயன் சேடி, இலங்கை ரூபாய்க்கு அடுத்தபடியாக உலகில் மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

150 உலக நாணயங்களின் செயல்திறனைக் கண்காணித்த பிறகு இந்த முடிவுகள் பெறப்பட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கானா நாட்டு நாணயம் அமெரிக்க டொலருக்கு எதிரான தொடர்ச்சியான தேய்மானத்திற்கு உட்பட்டது.

அதிக கடன் மற்றும் குறைந்த முதலீட்டாளர் நம்பிக்கை காரணமாக கானா சர்வதேச மூலதனச் சந்தைகளை கடனுக்காக அணுக முடியாத காலகட்டத்தில், அந்நியச் செலாவணிக்கான தேவையும் அது விநியோகத்தை விஞ்சியதால் குறைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.