உலகின் 20 கோடீஸ்வரர்கள் : அதானிக்கு மீண்டும் இடம்

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டொலராக உள்ளது.

பங்குச்சந்தையில் சற்று இறக்கத்தைச் சந்தித்தபின் அதானியின் சொத்து மதிப்பு சரிவிலிருந்து மேம்பட்டுள்ளது.

அதானியின் சொத்து மதிப்பு 2025 ஆம் ஆண்டு; 1.01 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

ஓரகிள் நிறுவனத்தின் லேர்ரி எல்லிசன் 305 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் இரண்டாமிடத்திலும், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸக்கர்பெர்க் 269 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடனும், ஆமெஸான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 243 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடனும் அதற்கடுத்தடுத்த இடங்களில் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானி அதில் 18-ஆவது இடத்தில் 99.5 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் இருக்கிறார்.

அதானி 20-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.