உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் தற்போது உள்ளவர்கள் யார்?

 

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

94 வயதான கோடீஸ்வரர் வாரன் பஃபெட் இந்த பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும்.

பணக்காரர்கள் பட்டியலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த முறை வாரன் பஃபெட் தொடர்பான மாற்றம் நிகழ்ந்துள்ளது.

94 வயதான வாரன் பஃபெட், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர் நீண்ட காலமாக உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு, அவர் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, வாரன் பஃபெட் தற்போது உலகின் 11 வது பணக்காரராக உள்ளார்.

அவரது நிகர சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர்களாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி டாப் 10 பணக்காரர்கள் பின்வருமாறு

  1. எலான் மஸ்க் – 371 பில்லியன் டாலர்கள். (உலகின் முதல் பணக்காரர்)
  2. லாரி எலிசன் – 302 பில்லியன் டாலர்கள்.
  3. மார்க் ஜுக்கர்பர்க் – 270 பில்லியன் டாலர்கள்.
  4. ஜெஃப் பெசோஸ் – 244 பில்லியன் டாலர்கள்.
  5. லாரி பேஜ் – 180 பில்லியன் டாலர்கள்.
  6. ஸ்டீவ் பால்மர் – 179 பில்லியன் டாலர்கள்.
  7. செர்ஜி பிரின் – 168 பில்லியன் டாலர்கள்.
  8. ஜென்சன் ஹுவாங் (NVIDIA) – 159 பில்லியன் டாலர்கள்.
  9. பெர்னார்ட் ஆர்னால்ட் – 153 பில்லியன் டாலர்கள்.
  10. மைக்கேல் டெல் – 141 பில்லியன் டாலர்கள்.