உலகின் சிறந்த பயண இடமாக இலங்கை

உலகளாவிய பயண இதழான (Time Out), 2025 அக்டோபருக்கான உலகின் சிறந்த பயண இடமாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

Time Out பத்திரிகை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, கலாசார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகைப் பாராட்டியுள்ளது.

உலகின் சிறந்த பயண இடமாக இலங்கைமேலும் அக்டோபரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது

தங்க கடற்கரைகள், மலை நடைகள், பழங்கால இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சபரிகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை வழங்கும் ஒரு தீவாக இலங்கை இங்கு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இலங்கைக்குப் பிறகு பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

அதே நேரத்தில் ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா போன்ற இடங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.