உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் இலங்கை

உலகின் சிறந்த கடவுச்சீட்டுகளுக்கான தரவரிசையில் 2025 ஆம் ஆண்டில் இலங்கை 171 ஆவது இடத்திலிருந்து 168ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக டுபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான நோமட் கெபிட்டலிஸ்ட் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளின் கடவுச்சீட்டுகள் விசா இல்லாத பயணம், வரிவிதிப்பு, உலகளாவிய கருத்து, இரட்டை குடியுரிமை சாத்தியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.

உலகளாவிய கருத்து என்ற பிரிவில் இலங்கை 30 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்த அளவீட்டில் 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெறும் நாடுகள் பெரும்பாலும் தங்கள் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பை எதிர்கொள்கின்றனர் என நோமட் கெபிட்டலிஸ்ட் கூறுகிறது.

தரவரிசையில் சிறிது முன்னேற்றம் இருந்தபோதிலும், உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையின் அடிப்படையில் இலங்கை சக பிராந்திய நாடுகளை விடவும் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாக நோமட் கெபிட்டலிஸ்ட் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு தரவரிசையில் அயர்லாந்து முதலிடத்தில் உள்ளதுடன், சுவிட்சர்லாந்து மற்றும் கிரேக்கம் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க