உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 : போட்டி அட்டவணை
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகும்.
2023ம் ஆண்டு இந்தியாவில் உலகக் கிண்ண தொடர் நடைபெறுவதால் இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். எப்போது தொடருக்கான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்ப்பு தீவிரமாக இருந்தது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கிண்ண தொடரின் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்