உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மந்தனாவுக்கு காத்திருந்த ஆச்சரியம்

இந்திய இசைக்கலைஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான பலாஷ் முச்சால், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு உலகக் கோப்பை மைதானத்தின் நடுவில் தனது காதலை முன்மொழிந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

விளையாட்டு ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த இந்த சம்பவம், சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பையை அவர் தூக்கிச் சென்ற மைதானத்தில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வின் காணொளியை சமூக ஊடகங்களில் பலாஷ் பகிர்ந்துள்ளார். மும்பையின் DT பாட்டீல் மைதானம் மந்தனாவுக்கு மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கிய இடம்.

ஒரு மாதத்திற்கு முன்பு மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி இந்த மைதானத்திலேயே வெற்றிக் கொண்டது.

பலாஷ் முச்சால், மந்தனாவின் கண்களை மூடிக்கொண்டு மைதானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கண்களைத் திறந்த பின்னர் கையில் மோதிரத்துடன் ஒரு முழங்காலில் இறங்கி அவளிடம் காதலை முன்மொழிந்தார்.

ஆரம்பத்தில் ஒரு நொடி திகைத்துப் போன மந்தனா, பின்னர் புன்னகைத்து அவரும் தனது காதலை முன்மொழிந்தார்.

பின்னர், தம்பதியினரின் நெருங்கிய நண்பர்களும், பலாஷின் சகோதரியுமான பாடகி பாலக் முச்சால், ஆகியோர் மைதானத்தின் நடுவில் மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டாடுவதை குறித்த காணொளியில் காணமுடிந்தது.

மந்தனாவும், பலாஷும் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்து வருவதாகவும், அவர்கள் தங்கள் உறவை பெரும்பாலும் இரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மந்தனா மற்றும் இந்திய அணிக்கு ஆதரவாக பலாஷ் மைதானத்திலிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இவர்களது திருமணம் நாளையதினம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திய மோடி இந்த தம்பதியினர் இருவருக்கும் தனது வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.