உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை இந்த உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது