உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

தெமட்டகொடை ரயில் பாதையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குறித்த பெண் தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.