உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து கொலை

அநுராதபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த நிலந்த குமார (வயது – 32) என்பவரே இவ்வாறு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த இளைஞன் இரவு வேளையில் தனது வீட்டின் திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் படுக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அங்கு வந்த சிலர் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.