உர மானியத் தொகை அதிகரிப்பு: அமைச்சரவை அங்கீகாரம்

நெற்செய்கைக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மானியத் தொகையை அடுத்த போகத்திலிருந்து அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உர மானியத் தொகை அதிகரிப்பு: அமைச்சரவை அங்கீகாரம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்