உருளைக்கிழங்கு நன்மைகள்
🔶🔶உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலணி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. காய்கறிகளிலேயே அதிக சுவை கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு திகழ்கிறது. இதை வேகவைத்து உண்பதே நல்லது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
🥔உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
🥔உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும் இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்வதால் மலசிக்கல் வராமல் தடுக்கிறது.
🥔உருளை கிழக்கிலும் சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருந்தாலும், அந்த கால்சிய சத்துகளை கரைக்கக்கூடிய மக்னீசிய சத்துகளும் அதிகம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அவ்வப்போது சரியான அளவில் உருளைக்கிழங்குகளை வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.
🥔உருளைக் கிழங்கில் உள்ள மாச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
🥔கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.
🥔வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
🥔உருளைக்கிழங்கு இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு படிவதை தடுப்பதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
🥔இதில் வைட்டமின் ஊ மற்றும் கரோடின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் இது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஸ்கர்வி நோய் வருவதை தடுக்கிறது.
🥔உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல் மற்றும் மனச்சோர்வை போக்கி, மூளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.
🥔வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.
🥔புற்றுநோய் வருவதை தடுக்கக்கூடிய உணவு பொருளாக உருளைக்கிழங்கு உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
உருளைக்கிழங்கு நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்