
உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை-மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதனை தொடர்ந்து, சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
