உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீட்பு
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ரன்ன வீதியில் உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வீரகெட்டிய பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
காரின் உரிமையாளர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
