
உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட திருப்பலி
-மன்னார் நிருபர்-
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



