உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால
“பிள்ளையான்” என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் காவலில் இருந்தபோது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறும் நிலையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அவற்றைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன,” என்று அமைச்சர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.