உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டு வருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்கள் திசை திருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.

காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய குடும்பங்களுக்காக பிராத்திக்கிறோம். நாங்கள் மிகவும் மன வேதனை அடைந்தோம். இன்னமும் அந்த வேதனை அடைகிறோம்.

காத்தான்குடி பிரதேசம் அநியாயமாக பல சோதனைகளையும் சவால்களையும் சந்திந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது தான், சில உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. யார் பின்னணியில் இருந்தார்கள், யார் இதை செய்தார்கள் போன்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்