உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு விசேட நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி இன்று காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தற்கொலைத் தாக்குதல்களின் நான்காவது ஆண்டை முன்னிட்டு நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க சமூகம் நேற்று வியாழக்கிழமை மாலை இரவு முழுவதும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியது.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்