உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்
பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு செஃப்ட்ரியாக்சோன் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம். எஸ். ஃபி மெடிவத்த தெரிவித்தார்.
மேலும் அவர் “எவ்வாறாயினும்இ இந்த மருந்து 10 ஊஊ ஊசி மூலம் செலுத்தப்பட வேண்டும், இது தற்போது கையிருப்பில் இல்லை. இந்த நிலை பேராதனை மருத்துவமனையில் மட்டுமல்ல, கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் உள்ளது” என்று கூறினார்.
“நீண்ட காலமாக, சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மருந்துகளின் தரம் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை தெரிவித்து வருகிறோம், அரசாங்கம் இப்போது அரசாங்கத்தின் தவறுகளுக்கு சுகாதார ஊழியர்களைக் குற்றம் சாட்ட முயற்சிக்கிறது என்றும் மெடிவத்த கருத்து தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்