உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு அஞ்சலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலை -சம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சிந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் ஆகியோரும் பொதுமக்களும் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கு.நாகேஸ்வரன் திருகோணமலை -அநுராதபுர சந்தியில் பாதசாரி கடவையை கடந்து செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

அமரர் கு.நாகேஸ்வரன் கிழக்கு மாகாண சபையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி 2012-2017 வரை மாகாண சபை உறுப்பினராக செயற்பட்டார்.

அத்தோடு யூரோஸ் புரட்சிகர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது