உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி : மலையக மக்களை நோக்கி செல்லவுள்ள நிவாரண உதவிகள்!

 

வரலாற்றில் மிக மோசமான இயற்கை அழிவை சந்தித்துள்ள இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் பணி நிறைவடைந்ததோடு இலங்கையில் இயற்கை அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தலைமையில் ஏறாவூர் பற்று வர்த்தக சங்கமும் இணைந்து இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி, மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில்நிவாரணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் சேகரிக்கும் பணியில் இன,மத பேதங்களை கடந்து ஏழை பணக்காரன் என்று பாராமல் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள அனைவரும், புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளும் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தனர்.

நிவாரண சேகரிக்கும் பணியை நிறைவு செய்த ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் பொது மக்கள் என அனைவரும் இணைந்து இலங்கையில் ஏற்பட்ட அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அஞ்சலி உரை நிகழ்த்தியதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபை சார்பாக நிவாரணம் சேகரிக்கும் பணியில் இணைந்து அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு, நிவாரணங்களை இன் மத பேதங்கள் இன்றி முன் வந்து வழங்கிய அனைவருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் உதயராஜ், ஏறாவூர் பற்று வர்த்தக சங்க தலைவர், ஜெகன், செயலாளர் டினேஸ் ஆகியோர் நிவாரணம் சேகரிக்கும் பணியில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.