
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்துக்கு பண உதவி
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாவலராக கடமையாற்றி விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபா பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த பண நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
