உயிரிழந்த பாடசாலை மாணவி டில்ஷியின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணி

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்சி அம்சிக்கா தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

இன்று மதியம் 2.30 மணியளவில் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.