உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சாமிமலை – ஸ்டொக்கம் தோட்டத்தின் ஸ்காபிரோ பிரிவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடல் காணப்படுவதாகத் தொழிலாளர்களினால் தோட்ட முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தோட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து நல்லத்தண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக பேராதனை கால்நடை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்