உயிரிழந்த சீன பிரஜையின் உடலை சீனாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி!
கொம்பனி தெருவில் உள்ள சொகுசு ஹோட்டலின் 22 ஆவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த ஒரு சீன பிரஜை உயிரிழந்த நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சீன பிரஜை உயிரிழந்தமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி துலால்ல பலல்லவின் அறிவுறுத்தலுக்கமைய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நபரின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்க புறக்கோட்டை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தை சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ,தங்கியிருந்த ஹோட்டலின் முகாமையாளர்,மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் ஏழு பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.