Last updated on April 28th, 2023 at 05:13 pm

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்கள், 2வது அமர்வின் பின்னர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 98 நாட்களே உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த முன்மொழிவு பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நியாயமான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன சனிக்கிழமை தெரிவித்தார்.