உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (2023/2024) உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு இன்று (14) புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு
புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது.
