
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று வியாழக்கிழமையுடன் முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை வெள்ளிக்கிழமை தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
