
உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக உத்தியோக பூர்வ கடமைகளை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் உத்தியோக பூர்வ பணிமனையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்
