
உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி
2019.04.21 அன்று இடம் பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவாக 21.04.2023 இன்று “உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக்களின் சம்மேளனம் இணைந்த ஏற்ப்பாட்டில் இவ் இரத்த தான முகாமானது தாண்டவன் வெளி மாதா கோவில் அருகில் அமைந்துள்ள பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.கலாராணி , மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிஷாந்தி அருள்மொழி, இளைஞர் சேவை அதிகாரி சு.பிரபீன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழங்களின் சம்மேளன தலைவர் ம. யுவபிரகாஸ் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் எஸ்.லவன்ராஜ் , செயலாளர் எஸ். சுஜீவா மற்றும் சம்மேளன உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மற்றும் மண்முனை வடக்குபிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஆலோசகர் இ.செந்தூரன் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது பல இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



