
உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்
-யாழ் நிருபர்-
உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மு. ப. 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு, வாக்குசீட்டுகளை விநியோகிக்கும் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.