உண்மையாகவே இருந்தாலும் மாமியாரிடம் ஒருபோதும் சொல்லவே கூடாத விடயங்கள்

மாமியார் இன்னொரு தாய் போன்றவர் என்றாலும் அவருடனா உறவு கண்ணாடி போன்றது. ஒரு சின்ன நடவடிக்கை கூட அந்த உறவை உடைத்து விடும். உங்களுக்கு பிடித்தலும், பிடிக்காவிட்டாலும் மாமியாரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. உங்களுக்கு எவ்வளவு கோபம் ஏற்பட்டாலும் உங்களுடைய எண்ணங்களை அவரிடம் வெளிப்படுத்தாமல் வைத்திருப்பது நல்லது.

மறந்து கூட உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் இதை சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதாக, உங்களுடைய மாமியாரிடம் சொல்லக்கூடாது. உங்களுடைய மாமியாரை நீங்கள் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய துணையின் குறைகளை குறித்து பேசாமல் இருப்பதே நலம்.

உங்கள் துணையின் தீய பழக்கங்களை யாரிடமிருந்து பெற்றார்கள்? என்பதை குறித்து தீர்ப்பிடாதீர்கள். இப்படி சுட்டிக்காட்டுவது மோசமானது. உங்கள் துணை பெற்றோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை பழகியுள்ளார் என்றாலும் தயவுசெய்து அந்த எண்ணத்தை உங்களின் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை வெளிப்படுத்தினால் அவரது பெற்றோரின் மனம் காயப்படும்.

எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வாருங்கள் என மாமியாரிடம் சொல்ல வேண்டாம். அவர் நல்லவராகவே இருந்தாலும், சொல்லவேண்டாம். இது அவர்களை உங்கள் இடத்திற்கு அடிக்கடி வர தூண்டும். இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் ஏற்படலாம். எந்த உறவாக இருந்தாலும் ஒரு எல்லை உண்டு.

உங்களுடைய மாமியார் சமையல் குறித்து ஒருபோதும் எதிர்மறையான வார்த்தைகளை சொல்லாதீர்கள். ஒருவேளை அவர் சமையலுக்கு அதிக எண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது உப்பு அதிகமாக சேர்க்கலாம். இது குறித்து அவரிடம் விமர்சனங்களை வைக்காமல் உங்களுக்கு தேவையானதை நீங்கள் சமைக்க முயற்சி செய்யுங்கள். அவருடைய நிறைகளை கூறிவிட்டு, உங்களின் எண்ணங்களை நாகரிகமாக வெளிப்படுத்துங்கள்.

உங்களுடைய மாமியாரின் உடைகள் குறித்து எப்போதும் விமர்சனங்களை வைக்காதீர்கள் அவருடைய ஆடைகள் அழகாக இல்லாமல் இருந்தால் அதை நேரடியாக கூறுவதை தவிர்த்து, அவர் அழகாக தெரிந்த ஆடைகள் குறித்து சொல்லுங்கள். மாமியாரிடம் நேரடியாக பார்க்கும் எதையும் விமர்சனாமாக சொல்லதீர்கள். கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்