உணவு ஒவ்வாமையினால் 43 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 43 ஊழியர்கள் உணவு ஒவ்வாமையினால் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உணவு ஒவ்வாமைக்கு உள்ளானவர்களில் 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட 25 பெண்களும் 18 ஆண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையிலிருந்து காலை உணவு வழங்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்