
உணவுப் பொதி மற்றும் ஏனைய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
