உணவில் மயக்க மருந்து கொடுத்து ஆசிரியர் செய்த கொடுமை

மொனராகலை – தொம்பகஹவெல லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பாடசாலையில் கணித கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர்,  மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார்.

அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியதையடுத்து தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில் மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.