
உணவக உரிமையாளர் கொலை : பலாக்காய் வர்த்தகமே காரணம்
கல்கிஸ்ஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
29 வயதான நபரே நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த உணவக உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் கொலைசெய்த சந்தேகநபர் பலாக்காய்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்திருந்த நிலையில் இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன், தற்போது கல்கிஸ்ஸை பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்